ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்சக்தி இயக்கத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம்
प्रविष्टि तिथि:
21 APR 2023 5:48PM by PIB Chennai
நீர் ஆதார வளத்துறை ஜல்சக்தி அமைச்சகம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவை இணைந்து நகர்ப்புறங்களில் ஜல்சக்தி இயக்கத்தின் கீழ் ஜல்சக்தி இயக்கத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு நகராட்சி ஆணையர்கள், லாபநோக்கற்ற அமைப்புகள் தனி நபர்கள் நகர்ப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திய முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுப்பது மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த முன்முயற்சிகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. நடப்பாண்டிலும், நகர்ப்புற பகுதிகளில் இத்தகையப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நகர்ப்புறங்களில் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை ஆகிய இரண்டு குறிக்கோள்களையும் எட்டும் வகையில், மழைநீரை சேகரிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
***
SM/RJ/KRS
(रिलीज़ आईडी: 1918617)
आगंतुक पटल : 204