விவசாயத்துறை அமைச்சகம்

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் 100-வது ஜி20 கூட்டமாக வேளாண் தலைமை விஞ்ஞானிகளின் சந்திப்பு வாரணாசியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

Posted On: 19 APR 2023 4:17PM by PIB Chennai

“ஆரோக்கியமான மக்கள் மற்றும் புவிக்கோளுக்கு நீடிக்கவல்ல வேளாண்மை மற்றும் உணவு முறை” என்பது குறித்த ஜி20 நாடுகளின் வேளாண் தலைமை விஞ்ஞானிகளின் கூட்டம் வாரணாசியில் வெற்றிகரமாக இன்று (19.04.2023) நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றில் இருந்து சுமார் 80 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 2023 ஏப்ரல் 17 அன்று தொடங்கிய 3 நாள் கூட்டத்திற்கு வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலாளரும், ஐசிஏஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் ஹிமான்ஷு பதக் தலைமை தாங்கினார்.

வேளாண்- உணவுமுறைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பத் தலையீடுகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து சாதனைக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள், உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பையும், வீணாதலையும் குறைப்பதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வுகள் போன்றவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. 

 இதன் பகுதியாக வேளாண் ஆராய்ச்சியில் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து பிரான்ஸ், பிரிட்டன், அர்ஜென்டினா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இருதரப்பு சந்திப்புகளும் நடைபெற்றன. 

உள்ளூர் கைவினைக் கலைஞர்கள் தங்களின் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது பற்றிய செயல்முறை விளக்கங்களுடன் வாரணாசி நகரின் ஜவுளித்துறை வரலாறு பற்றிய  கண்காட்சியை  ஏப்ரல் 19 அன்று ஜி20 பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

 

***

AP/SMB/AG/KRS

 



(Release ID: 1917996) Visitor Counter : 150