அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இன்று தொடங்கப்பட்ட இளைஞர் வலைதளம், இளம் ஸ்டார்ட்-அப்-களின் ஆற்றல் திறனை அடையாளம் கண்டு இணைக்க உதவும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 17 APR 2023 5:19PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இளைஞர் வலைதளத்தை தொடங்கிவைத்தார். இளம் ஸ்டார்ட்-அப்-களின் ஆற்றல் திறனை அடையாளம் கண்டு இணைக்க இது உதவும் என்று அவர் கூறினார்.

 தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் ‘ஒரு வாரம் - ஒரு ஆய்வகம்’ என்னும் திட்டத்தை புதுதில்லியில் தொடங்கிவைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் பங்களிப்பு இல்லாமல் நீடித்த வளர்ச்சியை அடைய முடியாது என தெரிவித்தார்.

‘ஒரு வாரம் - ஒரு ஆய்வகம்’ பிரச்சாரத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் ஜனவரி மாதம் 6-ந் தேதி தொடங்கிவைத்தார். தொழில்நுட்பத்தில் இந்தியாவின் உலகத்திறன், புத்தாக்கம், ஸ்டார்ட்-அப் ஆகியவை குறித்து விளக்கிய அவர், அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சிக் கவுன்சிலின் நாடு முழுவதும் உள்ள 37 ஆய்வகங்கள் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

நாக்பூரில் நடைபெற்ற 108-வது இந்திய அறிவியல் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், உலகில் அறிவியல் துறையில்  முன்னேறி வரும்  முன்னணி நாடுகளில் இந்தியா மிகவேகமாக வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டதை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். அரியானா மாநிலத்தின் கர்னாலில் அமைக்கப்பட்டுள்ள வானியல் ஆய்வகம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்படும் வகையில் வாய்ப்புகளை  வழங்கியுள்ளதாக அவர் கூறினார். செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களும், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்தும், விண்வெளியின் அற்புதங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள உதவும் என்றும், பல்வேறு மொழிகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது  என்றும் அவர் தெரிவித்தார்.

AP/PKV/AG/KRS

***


(Release ID: 1917411) Visitor Counter : 234