பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்னிவீர் மற்றும் இதர வகையிலான ராணுவப் பணிநியமனத்திற்கு இணையதளம் மூலம் பொதுநுழைவுத் தேர்வு தொடங்கியது

Posted On: 17 APR 2023 5:15PM by PIB Chennai

அக்னி வீரர்கள், இளநிலை அதிகாரிகள் மற்றும் இதர வகையினரின் பணிநியமனத்திற்கு முதல் கட்டமாக கணினி அடிப்படையிலான இணையதளம் மூலம் பொது நுழைவுத் தேர்வு நடைமுறையில் இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. தகுதிவாய்ந்த பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு நாடு முழுவதும் 176 இடங்களில் 375 தேர்வு மையங்களில் இன்று (17.04.2023) தொடங்கியுள்ள இந்தத் தேர்வு ஏப்ரல் 26 வரை தொடரும்.

கல்வி  அமைச்சகத்தின் கீழ் உள்ள மினி ரத்னா நிறுவனமான இந்திய கல்வி கலந்தாலோசனை சேவைகள் நிறுவனத்தின் உதவியுடன் இணையதளம் மூலமான  இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 

புதிய பணிநியமன நடைமுறை 3 கட்டங்களாக  செயல்படுத்தப்படும். முதல் கட்டத்தில் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பித்த அனைவரும் இணையதளம் மூலம் பொது நுழைவுத்தேர்வை எழுதலாம்.  2-வது கட்டத்தில் இதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2023 ஜூன் மாதத்திலிருந்து பணிநியமன தேர்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள். ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் சம்பந்தப்பட்ட இடங்களிலிருந்து அழைக்கப்படுவோர் உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் அளவுத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.  இறுதி மற்றும் 3-வது கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் பின்னர், வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்ட இறுதி தகுதிப் பட்டியல் அறிவிக்கப்படும்.

மாற்றியமைக்கப்பட்ட பணிநியமன நடைமுறை கூடுதல் முறைப்படுத்துதலுடனும் வெளிப்படைத்தன்மையோடும் இருக்கும்.  நாட்டின் நவீன தகவல் தொழில்நுட்ப அடிப்படைக் கட்டமைப்பை சிறப்பாகப் பயன்படுத்தி இந்த நடைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

***


(Release ID: 1917408) Visitor Counter : 244
Read this release in: English , Urdu , Hindi , Marathi , Odia