எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா எஃகு 2023 மாநாட்டை மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா தொடங்கி வைக்க உள்ளார்

प्रविष्टि तिथि: 17 APR 2023 4:00PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வர்த்தகத் துறை, ஃபிக்கி தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய எஃகு அமைச்சகம் மும்பை கோர்கானில் உள்ள மும்பை கண்காட்சி மையத்தில் ஏப்ரல் 19 முதல் 21 வரை எஃகு தொழில்துறை குறித்த மாநாடு மற்றும் சர்வதேச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. எஃகு தொழில்துறையில் உள்ள வாய்ப்புகள், சவால்கள், புதிய வளர்ச்சிகள் ஆகியவை குறித்து நிபுணர்களுடன் விவாதிக்கும் வகையிலும், தொழில்துறை தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் ஆகியோரை இணைக்கும் வகையிலும் இம்மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டை ஏப்ரல் 19, 2023 அன்று மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

***

AP/IR/RJ/KRS


(रिलीज़ आईडी: 1917361) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Odia , Telugu