விவசாயத்துறை அமைச்சகம்

வாரணாசியில் மூன்று நாள் ஜி20 வேளாண் தலைமை விஞ்ஞானிகள் கூட்டம் நாளை தொடங்குகிறது

Posted On: 16 APR 2023 5:55PM by PIB Chennai

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை  மூலம் நாளை முதல் வரும் 19ந்தேதி வரை வாரணாசியில் ஜி20 வேளாண் முதன்மை விஞ்ஞானிகளின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி20 உறுப்பு நாடுகளான ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, கொரியா குடியரசு, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தும் சுமார் 80 வெளிநாட்டு பிரதிநிதிகள், வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் ஆகிய அழைக்கப்பட்ட விருந்தினர் நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இந்தியாவின் சிறப்பு அழைப்பாளர்கள், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த மூன்று நாள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

மத்திய வேளாண் அமைச்சகம், வெளிவிவகார அமைச்சகம் உட்பட ஏனைய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து, பருவநிலை ஸ்மார்ட் விவசாயம், டிஜிட்டல் விவசாயம், பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மை உள்ளிட்ட வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் பல்வேறு சிக்கல்கள். விவாதத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளன. சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி,  "சிறுதானியங்கள் மற்றும் பிற பழங்கால தானியங்கள் சர்வதேச ஆராய்ச்சி முயற்சி (மகரிஷி)" குறித்து விவாதிக்கப்படுவதுடன், அதுபற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது பற்றியும் விவாதிக்கப்படும்.

 

வாரணாசிக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் செழுமையான கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் தனித்துவமான அனுபவத்தை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படும். நகரத்தில் அவர்கள் வசதியாக நடமாடுவதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ள மாவட்ட நிர்வாகம், கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அவர்கள் தங்கும் ஹோட்டல்களில் அவர்களின் பாதுகாப்பிற்கான போதுமான ஏற்பாடுகளையும்  செய்துள்ளது.

 

 தொடக்க அமர்வில், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெனரல்  வி.கே.சிங் கலந்து கொள்கிறார். அடுத்தடுத்த தொழில்நுட்ப அமர்வுகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பல்வேறு துணைக் கருப்பொருள்கள், டிஜிட்டல் விவசாயம் மற்றும் நிலையான வேளாண் உணவு மதிப்புச் சங்கிலி மற்றும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான  பொது-தனியார் பங்கேற்பு தொடர்பான பல்வேறு துணைக் கருப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கங்கா ஆரத்தியின் ஒளிரும் காட்சியைக் காண நாளை பிரதிநிதிகள் கப்பல் சவாரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதன்பிறகு, தாஜ் கங்கையில் வரவேற்பு விருந்து மற்றும் கலாச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களுக்கு செல்லும் பிரதிநிதிகள், வரும் 20 ந்தேதி தங்கள்  நாடுகளுக்குச் செல்வார்கள்.

***

AD/PKV/DL



(Release ID: 1917129) Visitor Counter : 170