மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்(FAHD) அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, விலங்கு தொற்றுநோய்க்கான தயாரிப்பு முயற்சிகள் மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரோக்கியத்திற்கான விலங்கு சுகாதார அமைப்பு ஆதரவைத் தொடங்கி வைத்தார்.

Posted On: 14 APR 2023 2:28PM by PIB Chennai

இது ஆரோக்கிய அணுகுமுறைக்கு ஏற்ப, விலங்கு தொற்றுநோய்களுக்கான இந்தியாவின் தயார்நிலை மற்றும் முன்னெடுப்புகளை மேம்படுத்தும்

விலங்கு தொற்றுநோய்க்கான தயார்நிலை முன்முயற்சி மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய “ஆரோக்கியத்திற்கான விலங்கு சுகாதார அமைப்பு ஆதரவு” ஆகியவை விலங்கு தொற்றுநோய்களை முழுமையான முறையில் நிவர்த்தி செய்வதற்கான விரிவான முயற்சிகள்: மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ருபாலா, விலங்கு தொற்றுநோய்க்கான தயாரிப்பு முயற்சி மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய ஆரோக்கியத்திற்கான விலங்கு சுகாதார அமைப்பு ஆதரவை இன்று தொடங்கி வைத்தார். விலங்கு மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஜூனோடிக் நோய்களை மையமாகக் கொண்டு, விலங்கு தொற்றுநோய்களுக்கான இந்தியாவின் தயார்நிலை மற்றும் முன்னெடுப்புகளை மேம்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி கால்நடை சேவைகள் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.

இந்தியாவில் உலக வங்கியின் நிதியுதவியுடன் "ஆரோக்கியத்திற்கான விலங்கு சுகாதார அமைப்பு ஆதரவு (AHSSOH)” குறித்த திட்டம் ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு சுகாதார அணுகுமுறையைப் பயன்படுத்தி சிறந்த விலங்கு சுகாதார மேலாண்மை அமைப்புக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு  தொடங்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய மாண்புமிகு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், “ஆரோக்கியத்திற்கான விலங்குகள் சுகாதார அமைப்பு ஆதரவு (ஏபிபிஐ) மற்றும் விலங்கு சுகாதார அமைப்பு ஆதரவு திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. விலங்குகளின் தொற்றுநோயை நிவர்த்தி செய்வதற்கு ஒரு படி நெருக்கமானது. எதிர்காலத்தில் அறியப்படாத நோய்த்தொற்றுகளைக் கையாள்வதற்கான தயார்நிலையை இது உருவாக்கும். சுகாதார முன்முயற்சிகளை செயல்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் நிலையான மற்றும் ஆரோக்கியமான மீன்பிடித்தலை நாம் ஊக்குவிக்க முடியும் என்றார்.

இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறை (DAHD), விலங்கு தொற்றுநோய்க்கான தயாரிப்பு முயற்சி மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய ஒரு ஆரோக்கியத்திற்கான விலங்கு சுகாதார அமைப்பு ஆதரவை வெற்றிகரமாக செயல்படுத்துவதே இதன் முதன்மை இலக்காகும்.

***

AD/CJL/DL



(Release ID: 1916677) Visitor Counter : 125