சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 133வது பிறந்தநாளில் அவருக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது
प्रविष्टि तिथि:
14 APR 2023 1:40PM by PIB Chennai
பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 133வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தேசத்தை வழிநடத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் சன்சத் பவன் புல்வெளியில் நிறுவப்பட்டுள்ள பாபாசாகேப் சிலைக்கு இன்று காலை குடியரசுத்தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஆகியோரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர் டாக்டர் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள், தலைவர்கள், பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
***
AD/SMB/DL
(रिलीज़ आईडी: 1916666)
आगंतुक पटल : 168