பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட இரண்டாவது ஜி20 மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கூட்டத்தில், மகளிர் தலைமையிலான வளர்ச்சி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது
Posted On:
13 APR 2023 1:01PM by PIB Chennai
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தில் மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கூட்டம் திருவனந்தபுரத்தில் 2023 ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்றது. "மகளிர் தொழில்முனைவு, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் சமத்துவம்" என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதங்களில் மகளிருக்கு அடித்தள நிலையிலிருந்து தலைமைத்துவம் வரை அனைத்து நிலைகளிலும் பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியாவின் தலைமைத்துவத்தில் நடத்தப்பட்ட இந்த ஜி20 மகளிருக்கு அதிகாரமளித்தல் கூட்டத்தில், பெண்களின் மேம்பாட்டிற்கான மின்னணுதளம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அறிவுத்திறன் பகிர்வு மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் வடிவமைக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள எட்டு நாடுகளைச் சேர்ந்த 18 பிரதிநிதிகளும், 6 சிறப்பு அழைப்பாளர் நாடுகளைச் சேர்ந்த 9 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட 6 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
***
AP/PLM/MA/KPG
(Release ID: 1916224)
Visitor Counter : 149