தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அரசின் சாதனைகள் குறித்து விளக்கும் ‘தரோஹர் பாரத் கி - புன்ருதான் கி கஹானி’ ஆவணப்படத்தை தூர்தர்ஷன் ஒளிபரப்பவுள்ளது

Posted On: 13 APR 2023 2:38PM by PIB Chennai

இந்தியாவின் தற்கால வலிமை, நமது செழுமைமிக்க கலாச்சார, ஆன்மிக மற்றும் தேசிய நெறிமுறைகளில் உள்ளது. இந்த முற்போக்கான தருணத்தில், தூர்தர்ஷன் 'தரோஹர் பாரத் கி-புன்ருத்தான் கி கஹானி'  என்ற ஆவணப்படத்தை இரண்டு பகுதிகளாக ஒளிபரப்புகிறது. முதல் பகுதி ஏப்ரல் 14, 2023 இரவு 8.00 மணிக்கும், 2-வது பகுதி ஏப்ரல் 15,2023 இரவு 8.00 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது.  இந்த ஆவணப்படத்தை பிரபல மின்னணு ஊடகத் தொகுப்பாளர் காமியா ஜானி தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த ஆவணப்படம் குறித்து பிரத்யேகமாக உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி,   “நம் வீரர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து, நமது தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்கிறார்கள். அவர்களின் தியாகத்தை வெறும் வார்த்தைகளால் அளவிட முடியாது. எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில்  அவர்களுடைய தியாகம் குறித்த தகவல்கள் உயிர்ப்புடன் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

அவரது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் கலாச்சார ஒற்றுமை மற்றும் பெருமையின் உணர்வை மீட்டெடுப்பதற்காக இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய முயற்சிகளை ஆவணப்படம்  காட்சிப் படுத்தப்படவுள்ளது. ஜாலியன்வாலா பாக் போன்ற தேசபக்தி தளங்களுக்கான பாதுகாப்பையும் புனிதத்தையும் உறுதி செய்தல், கர்தார்பூர் சாஹிப் போன்ற ஆன்மிகத் தலங்களைப் பொறுத்து நமது நாகரிக மையங்களான ராம ஜென்மபூமி, காசி விஸ்வநாத் கோயில், சோம்நாத் கோயில் மற்றும் கேதார்நாத் கோயில் போன்றவற்றை உயிர்ப்பித்துள்ளோம். இந்திய  நுழைவாயில் பகுதியில் உள்ள பிரமாண்டமான நேதாஜி சிலை மூலம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பை எடுத்துரைப்பது, போர் நினைவுச்சின்னம் மூலம் நமது தேசபக்தர்களின் புகழ்பெற்ற பங்களிப்பை கௌரவிப்பது ஆகியவை ஆவணப்படத்தில்  இடம் பெற்றுள்ள சில கருப்பொருள்கள் ஆகும்.

                                                                                                                                    ***

AP/IR/AG/KPG

 



(Release ID: 1916212) Visitor Counter : 131