அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் இதழ்களின் சிறப்பு மலர்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது

Posted On: 12 APR 2023 11:56AM by PIB Chennai

பெருந்தொற்றுக்குப் பின்னர் பெரும்பாலான மக்கள் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதுடன், சுகாதாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி விஷயங்கள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டுள்ளனர். அறிவியல் தகவல்கள் மக்களிடையே நடைமுறை மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன. இந்த விஷயத்தில் பிரபல அறிவியல் இதழ்களான விஞ்ஞான் பிரகதி, சயின்ஸ் ரிப்போர்டர் போன்றவை சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளன. அறிவியல் ஆராய்ச்சித்துறை செயலர் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் டாக்டர் ராஜீவ் பாகல், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமையகத்தில் கடந்த 10-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதுடன், பிரபல அறிவியல் இதழ்களான விஞ்ஞான் பிரகதி, சயின்ஸ் ரிப்போர்டர் ஆகியவற்றின் சிறப்பு மலர்களை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய அறிவியல் தகவல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், சிஎஸ்ஐஆரின் இந்த இரண்டு இதழ்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புணர்ச்சியுடன் தொண்டாற்றி வருவதாக கூறினார். அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை சமுதாயத்தில் பரப்பி அறிவியல் உணர்வை அவை வளர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சிறப்பு இதழ்களில், பல்வேறு சுகாதாரம் சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மருத்துவ சுகாதாரம், தொற்றுநோய்கள், வாழ்வியல் நோய்கள், பேறுகால பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு  நோய்கள் குறித்த கட்டுரைகள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும் குழந்தை திருமணங்களால் ஏற்படும் சுகாதார விளைவுகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இதழ்களின் ஆசிரியர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வகங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சயின்ஸ் ரிப்போர்டர் இதழின் ஆசிரியர் திரு ஹாசன் ஜவைத் கான், விஞ்ஞான் பிரகதியின் ஆசிரியர் டாக்டர் மணீஷ் மோகன் கோரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

PKV/AG/KPG

 


(Release ID: 1915916) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Hindi , Telugu