வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா - பிரான்ஸ் வர்த்தக மாநாடு மற்றும் தலைமை செயல் அதிகாரிகளின் வட்டமேஜை மாநாட்டில் திரு பியூஷ்கோயல் உரையாற்றினார்

Posted On: 12 APR 2023 9:26AM by PIB Chennai

பிரான்ஸ் தலைநகர்  பாரீசில் நேற்று நடைபெற்ற     இந்தியா - பிரான்ஸ் வர்த்தக மாநாடு மற்றும் தலைமை செயல் அதிகாரிகளின் வட்டமேஜை மாநாட்டில்  மத்திய  வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ்கோயல் உரையாற்றினார். இந்தியாவின் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சரக்கு மற்றும் சேவை வரி மிகப் பெரிய நுகர்வோர்களாக  இந்தியா திகழ்கிறது என்றும் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவைத் துறைகளின் ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த வளர்ச்சி தொடரும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். சரக்கு மற்றும் சேவைத்துறையின் ஏற்றுமதி தற்போது 765 பில்லியன் டாலராக உள்ள நிலையில், அது 2030-ஆம் ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இரண்டு ட்ரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

பாரீசில் உள்ள இந்திய தூதரகம், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, பிரான்ஸ் தொழில்துறை கூட்டமைப்பு, இந்தோ -பிரெஞ்ச் வர்த்தக சபை மற்றும் தொழில்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா - பிரான்ஸ் வர்த்தக மாநாடு மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் வட்டமேஜை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இக்கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் திரு ஆலிவர் பெக்ட், உலக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, பல்வேறு உற்பத்தி் நடவடிக்கைகளில் ஈடுபடும் திறன் கொண்டதாக உள்ளது என்று கூறினார். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

***

AD/IR/KPG/RR



(Release ID: 1915856) Visitor Counter : 117