ஜவுளித்துறை அமைச்சகம்
இரண்டு வகைப்பட்ட 31 ஜவுளிப் பொருட்களுக்கு தரக்கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
11 APR 2023 1:27PM by PIB Chennai
இரண்டு வகைப்பட்ட 31 ஜவுளிப் பொருட்களுக்கு தரக்கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முதல் கட்டத்தில் 19 புவிசார் ஜவுளிப்பொருட்களும் 12 பாதுகாப்பு சார்ந்த ஜவுளிப்பொருட்களும் இடம்பெறும்.
தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளித் தொழில் துறைக்கு இந்தியாவிலிருந்து முதன் முறையாக தொழில்நுட்ப முறைப்படுத்தலின் அடையாளமாக இந்த தரக்கட்டுப்பாட்டு விதிகள் உள்ளன என்று புதுதில்லியில் இன்று (11.04.2023) செய்தியாளர்களிடம் பேசிய இணைச்செயலாளர் திரு ராஜீவ் சக்சேனா தெரிவித்தார்.
சுற்றுச்சூழல், மனித ஆரோக்கியம், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும், பொதுநலன் கருதி தரத்தை அதிகரிப்பதும் அவசியம் என்பது மத்திய அரசின் கருத்து என்று அவர் கூறினார். 19 புவிசார் ஜவுளிப் பொருட்களில் லேமினேஷன் செய்யப்பட்ட அதி அடர்த்தி பாலீத்திலின், ஊசியால் தைக்கப்பட்ட நெய்யப்படாத பை வகைகள், சணலால் செய்யப்பட்ட ஜவுளிப்பொருட்கள், கயிறுகளால் நெய்யப்பட்ட ஆடைகள் போன்றவை இடம்பெறும்.
பாதுகாப்புச் சார்ந்த 12 ஜவுளிப்பொருட்களில் தீயணைப்பு வீரர்களுக்கான ஆடைகள், கையுறைகள், வெப்பத்தை வெளியிடும் தொழில் துறை பணியாளர்களுக்கான ஆடைகள், பற்றவைப்பு மற்றும் அதுசார்ந்த பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான ஆடைகள் போன்றவை இடம்பெறும்.
இரண்டாம் கட்டத்தில் வேளாண்மை சார்ந்த 22 ஜவுளிப் பொருட்களுக்கும், மருந்துசார்ந்த 6 ஜவுளிப் பொருட்களுக்கும், தரக்கட்டுப்பாட்டு விதிகளை வெளியிட ஜவுளி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
***
AD/SMB/RS/KPG
(रिलीज़ आईडी: 1915615)
आगंतुक पटल : 243