எரிசக்தி அமைச்சகம்
மாநில எரிசக்தி திறன் குறியீடு 2021-22-ல் முன்னணி மாநிலங்களாக ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் திகழ்கின்றன
Posted On:
10 APR 2023 5:43PM by PIB Chennai
மாநில எரிசக்தி திறன் குறியீடு 2021-22-ன் அறிக்கையை மத்திய மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் இன்று வெளியிட்டார். புதுதில்லியில் நடைபெற்ற மறு ஆய்வு, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் இது வெளியிடப்பட்டது.
மாநில எரிசக்தி திறன் குறியீடு 2021-22-ல் 60-க்கும் மேற்பட்ட புள்ளிகளுடன் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக திகழ்கின்றன. சாதனையாளர் பிரிவில் 50 முதல் 60 புள்ளிகளுடன் அசாம், ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்கள் உள்ளன. மாநிலங்களின் பிரிவு சிறந்த செயல்திறன் மிக்க மாநிலங்களாக கர்நாடாகா, ஆந்திரப்பிரதேசம், அசாம், சண்டிகர் மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் கடந்த குறியீட்டிலிருந்து மிகவும் மேம்பட்ட மாநிலங்களாக உள்ளன.
***
AD/IR/RJ/KPG
(Release ID: 1915432)
Visitor Counter : 218