கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சாகர்மாலா புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்-அப் வரைவுக்கொள்கை தொடர்புடையவர்களின் ஆலோசனைக்காக வெளியிடப்பட்டது
Posted On:
10 APR 2023 4:35PM by PIB Chennai
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் மூலம் நாடு வளர்ச்சியடைகிறது. வலிமையான புதுமைக்கண்டுபிடிப்புகள் சூழலைக் கட்டமைக்க சாகர்மாலா புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்-அப் வரைவுக்கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியடைந்து வரும் கடல்சார் துறையின் எதிர்காலத்திற்காக ஸ்டார்ட்-அப் மற்றும் இதர நிறுவனங்களை தோற்றுவிக்கும் வகையில் இந்த வரைவுக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வளத்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், நாட்டில் ஸ்டார்ட்-அப் மற்றும் புதுமைக்கண்டுபிடிப்புகளை வலிமையான சூழலுக்கேற்ற வகையில் மாற்றியமைக்க தமது அமைச்சகம் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.
***
AD/IR/RJ/KPG
(Release ID: 1915394)
Visitor Counter : 150