வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு பிராந்திய மேம்பாடு, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைக்கான மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, 10, 11 ஏப்ரல் 2023 தேதிகளில் திரிபுராவுக்கு வருகை தருகிறார்
Posted On:
09 APR 2023 5:03PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்திய மேம்பாடு, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைக்கான மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி 10, 11 ஏப்ரல் 2023 தேதிகளில் திரிபுராவிற்கு வருகை தருகிறார். முதலமைச்சர் திரு மாணிக் ஷா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், வடகிழக்குக்கான கவுன்சில் (NEC) மற்றும் மாநில அதிகாரிகளுடன் இணைந்து வளர்ச்சி குறித்தான ஆய்வுகளை மேற்கொள்கிறார்.
திரு ரெட்டி, அகர்தலா அகௌரா ரயில் திட்டத்தைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொள்வார். அமைச்சர் தலைமையில் வடகிழக்கு பாதுகாப்பு, கல்வி மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்பு மாநாட்டையும் அமைச்சர் தலைமையேற்று தொடங்கி வைப்பார். "இந்தோ-பசிபிக் கூட்டாண்மையில் வடகிழக்கு இந்தியா, வங்காளதேசம் மற்றும் வங்காள விரிகுடா - முன்னெடுப்புகள்" என்று ஆசிய சங்கமம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுவார்.
**************
SM/CJL/DL
(Release ID: 1915132)
Visitor Counter : 139