ஆயுஷ்
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (AllA) ஒருங்கிணைந்த முழுமையான சுகாதாரம் தொடர்பான C20 இன் பணிக்குழு
Posted On:
09 APR 2023 4:52PM by PIB Chennai
ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் ஒத்துழைப்பதற்காக அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) மற்றும் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி "ஒருங்கிணைந்த முழுமையான சுகாதாரம் தொடர்பான C20 இன் பணிக்குழுவினை நடத்தியது. இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சி20 என்பது ஜி20இன் எட்டு அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 19 நாடுகளின் கூட்டமைப்பாகும். சி20 இந்தியா 2023 என்பது ஜி20 இன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும். இது உலகெங்கிலும் உள்ள மக்களின் விருப்பங்களுக்கு குரல் கொடுக்க ஒரு தளத்தை வழங்குகிறது.
ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக அமிர்த விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்துடன் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம்(AIIA) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவன(AIIA )இயக்குனர் பேராசிரியர் தனுஜா நேசரி மற்றும் அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் கொச்சி வளாகத்தில் மருத்துவ அறிவியல் பேராசிரியர் பிரேம் குமார் வாசுதேவன் நாயர் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஏற்கெனவே அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இதே போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுடனும் மேற்கொண்டுள்ளது.
ஆயுர்வேத விஞ்ஞானம் உலகிற்கு இந்தியாவின் பரிசு - இது இந்தியாவின் அறிவு, கற்றல், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகும். அதனை மீட்டெடுக்கும் விதமாக சி20 மூலம் மீண்டும் ஒருங்கிணைப்பின் மூலம் முழுமையான சிகிச்சைமுறையை நோக்கி கவனம் செலுத்தப்படுகிறது. நவீன மருத்துவத்துடன் கூடிய ஆயுர்வேதம் ஒரு புதுமையான அணுகுமுறை மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும்" என்று ஐ.நா.வின் உதவி பொதுச் செயலாளரும் ஐ.நா மகளிர் துணை நிர்வாக இயக்குனருமான டாக்டர் திருமதி அனிதா பாட்டியா கூறினார்.
***
SM/CJL/DL
(Release ID: 1915115)
Visitor Counter : 208