வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-பிரான்ஸ் நட்புறவின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இந்தியா-பிரான்ஸ் வர்த்தக உச்சி மாநாடு 2023-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதியன்று நடைபெறுகிறது
Posted On:
09 APR 2023 1:43PM by PIB Chennai
இந்தியா-பிரான்ஸ் இடையிலான நட்புறவின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 2023-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்தியா-பிரான்ஸ் வர்த்தக உச்சி மாநாட்டிற்கு மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு,பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், பிரான்ஸ் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஆலிவர் பெக்ட் உடன் இணைந்து தலைமை தாங்கவுள்ளார். இந்த மாநாட்டிற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 2023 ஏப்ரல் 11-13-ம் தேதி வரை பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்கிறார். அவருடன் இந்தியாவிலுள்ள முக்கிய நிறுவனங்களின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகளும் செல்கின்றனர். அங்கு பிரான்ஸின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களைச் சந்திக்க பியூஷ் கோயல் சந்திக்கவுள்ளார்.
மேலும், பிரான்ஸ் அமைச்சர் ஆலிவர் பெக்ட் உடன் இணைந்து இந்தியாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் நிகழ்வில் அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார். இதில் பிரான்ஸ் அரசின் 600-க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள், பிரான்சில் உள்ள இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாரீஸில் உள்ள இந்தியர்களுடன் அமைச்சர் உரையாடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இத்தாலியின் ரோம் நகருக்குச் செல்லும் அமைச்சர் பியூஷ் கோயல் அந்நாட்டு துணைப்பிரதமரும், வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை அமைச்சர் ஹெச்.இ. அன்டோனியோ தஜானியை சந்திக்கவுள்ளார். பின்னர், இத்தாலியைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இதில்,35 நிறுவங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இந்த பயணம் ஐரோப்பாவில் இந்தியாவின் முக்கிய வர்த்தக நட்பு நாடுகளுடனான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
***
SM/CR/DL
(Release ID: 1915071)
Visitor Counter : 241