பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்தியாவில் முதன்முறையாக சுகாதாரத்தில் வருமுன் காப்போம் முறையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் - டாக்டர் ஜிதேந்திர சிங்
இளைஞர்களின் ஆற்றலும் திறனும் அமிர்த காலத்துக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் - டாக்டர். ஜிதேந்திர சிங்
இந்தியா இரண்டு டிஎன்ஏ தடுப்பூசிகளையும் ஒரு நாசி தடுப்பூசியையும் தயாரித்துள்ளது. அதை 130 நாடுகளுக்கு கோவிட்-ஐ எதிர்த்துப் போராட வழங்கியுள்ளது - டாக்டர் ஜிதேந்திர சிங்
இந்திய பிரச்சனைகளுக்கு இந்திய ஆராய்ச்சி இந்திய தரவு மூலம் இந்தியர்களே தீர்வு காண்பதே காலத்தின் தேவை - டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
08 APR 2023 2:17PM by PIB Chennai
அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், ஜிஎம்சி ஜம்முவில் தலைமை விருந்தினராக தைரோகானில் பங்கேற்ற பிரதிநிதிகளிடம் உரையாற்றினார். கடந்த எழுபது ஆண்டுகளாக நாட்டில் கவனிக்கப்படாத 'வருமுன் காப்பதற்கான சுகாதாரப் பாதுகாப்பை முதன்முறையாக அறிமுகம் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இரண்டு ஆண்டுகளில் இரண்டு டிஎன்ஏ தடுப்பூசிகளையும், ஒரு நாசி தடுப்பூசியையும் இந்தியா தயாரித்துள்ளது என்றார்.
அமிர்த காலத்தின் சிற்பிகளாக இளைஞர்களின் பங்கும் பொறுப்பும் அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார். இளைஞர்களின் ஆற்றலும் திறனும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று கூறினார்.
ஜம்மு அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உட்சுரப்பியல் துறையுடன் இணைந்து ஜம்மு மருத்துவர்கள் அறக்கட்டளை செய்துள்ள தைரோகான் (THYROCON) மாநாட்டு முயற்சிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். தைராய்டு கோளாறுகள் உள்ள நோயாளிகளின் மருத்துவ மேலாண்மையின் முன்னேற்றத்தை இத்தகைய மேம்பாடுகள் பிரதிபலிக்கும். தைராய்டு கோளாறுகள் இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே ஜம்மு மற்றும் காஷ்மீரிலும் பொதுவான உடல்நலப் பிரச்சினை என்று அவர் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டில் மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் தைராய்டு கோளாறுகளின் பாதிப்பு சுமார் 12.3% ஆகும், ஹைப்போ தைராய்டிசம் மிகவும் பொதுவான வகையாகும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் மருத்துவ சுகாதார பிரச்சினைகளுக்கு உள்நாட்டு தீர்வுகளை உருவாக்க பல்வேறு இந்திய தரவுகளைப் பயன்படுத்துவது காலத்தின் தேவை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், மருத்துவ சகோதரத்துவம் இடையே ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தைராய்டு நோய்கள் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்தை உருவாக்க இந்த முதன்மை நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புதிய இந்தியா என்பது சுகாதாரப் பாதுகாப்பில் வாய்ப்புகளின் சகாப்தமாக உள்ளது. எய்ம்ஸ் ஜம்மு தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஐஐடி ஜம்மு மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக ஐஐஎம் ஜம்முவுடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
***
CJL/SM/DL
(Release ID: 1914879)
Visitor Counter : 168