குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவரின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி
प्रविष्टि तिथि:
08 APR 2023 2:54PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் விடுத்துள்ள செய்தியில், "ஈஸ்டர் திருநாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து மக்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலாகக் கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சிப் பண்டிகை அன்பு மற்றும் இரக்கத்தின் அடையாளமாகும். இயேசு கிறிஸ்து உண்மைக்காகவும் நீதிக்காகவும் தம் உயிரை தியாகம் செய்து அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை நமக்கு வழங்கினார். அவரது வாழ்க்கை இரக்கத்திற்கும் தியாகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இயேசு கிறிஸ்துவின் விழுமியங்களை ஏற்று நமது சமுதாயத்தில் அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்புவோம், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்போம் என்று உறுதிமொழி எடுப்போம்". என்று கூறியுள்ளார்.
***
CJL/SM/DL
(रिलीज़ आईडी: 1914874)
आगंतुक पटल : 163