அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

என்சி-ஐசிபிஎஸ் இயக்கம் மூலம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதன் மூலம் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு மற்றும் வணிகமயமாக்கலை துரிதப்படுத்த முடியும்: நிபுணர்கள்

Posted On: 08 APR 2023 12:12AM by PIB Chennai

தொழில்நுட்பங்கள், மொழிபெயர்ப்பு மற்றும் தொழில்நுட்பங்களின் வணிகமயமாக்கல் ஆகியவற்றின் உதவியுடன் பல்துறை சைபர் அமைப்புகளை (என்சி-ஐசிபிஎஸ்) வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தொழில்நுட்ப கண்டுபிடிப்பு பற்றிய தேசிய பயிற்சிப் பட்டறையில் நிபுணர்கள் ஆலோசித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய உந்துதலாக மாறும்.

தொழில்நுட்ப கண்டுபிடிப்பு பற்றிய 2-வது தேசிய பயிற்சிப் பட்டறையில் உரையாற்றிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், “சைபர் பிசிக்கல் சிஸ்டம்ஸ் (CPS) எதிர்காலத்தில் உடல்நலம் மற்றும் மருத்துவம்,  போக்குவரத்து மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி போன்ற துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை இதில் அறிமுகப்படுத்த வேண்டும்“ எனக் கூறினார்.

பல்துறை சைபர் அமைப்புகளுக்கான தேசிய இயக்கத்திற்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) மூலம் செயல்படுத்தப்படும் இந்த இயக்கத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ரூ.3660 கோடி ஒதுக்கியது.

இந்த இயக்கத்தை அமலாக்குவதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களில் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் 25 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள் (TIHs) நிறுவப்பட்டுள்ளன. இவை தொழில்நுட்ப மேம்பாடு, மொழிபெயர்ப்பு, மனித வளம் மற்றும் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர், சர்வதேச கூட்டு ஆராய்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

 

பெங்களூருவில் உள்ள ஆக்சிலர் வென்ச்சர்ஸ் நிறுவனத் தலைவரும், என்சி-ஐசிபிஎஸ் நிர்வாகக் குழுவின் தலைவருமான டாக்டர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பின் அவசியத்தையும், பல துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இந்த இயக்கம் தொழில்நுட்ப மேம்பாடு, சைபர் பிசிகல் சிஸ்டம்ஸ் (CPS) மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மற்றும் வணிகமயமாக்கல், அடுத்த தலைமுறை திறமைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, உள்கட்டமைப்பு போன்றவற்றை மாற்றியமைத்து, மற்ற முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவை இன்னும் திறமையாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும் மாற்றும்.

***

 

CR/SM/DL/RS(Release ID: 1914854) Visitor Counter : 146


Read this release in: English , Urdu , Hindi , Marathi