வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் - 2023க்கான விண்ணப்பங்களை 2023 மே 31 வரை அனுப்பலாம்

Posted On: 07 APR 2023 12:52PM by PIB Chennai

தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) 2020 ஆம் ஆண்டில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளை (NSA) அறிமுகப்படுத்தியது. இது புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வெளிப்படுத்தும் ஸ்டார்ட்அப் சூழலில் சிறந்த ஸ்டார்ட்அப்கள் மற்றும் செயல்படுத்துபவர்களுக்கு வெகுமதியோடு அங்கீகாரம் அளிக்கிறது. இதுவரை மூன்று முறை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பின் வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்டார்ட்அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசிய ஸ்டார்ட்அப் விருதுக் 2023ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 31 மே 2023 ஆகும்.

தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2023, 'விஷன் இந்தியா @2047'க்கு ஏற்ப, நாடு முழுவதும் உள்ள புதுமைகளைக் கொண்டாடும். இது இந்தியாவை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. முக்கிய கருப்பொருள்கள் முழுவதும் அமிர்தகாலத்தின் செயல்பாடுகள் அடிப்படையில் அமைந்துள்ளன.

இந்த முறை ஸ்டார்ட்அப்கள் 20 பிரிவுகளில் வழங்கப்படும். அவை தற்போதைய இந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார மைய புள்ளிகள் பற்றிய முழுமையான ஆலோசனையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளன. விண்வெளி, சில்லறை விற்பனை மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களில் உள்ள கண்டுபிடிப்புகள் முதல் அதிக தாக்கத்தை மையமாகக் கொண்ட பிரிவுகள் வரை இருக்கும்.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் ஒரு  நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2023 இன் வெற்றியாளர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களுக்கு முதலீட்டாளர் மற்றும் அரசு இணைப்பு, வழிகாட்டுதல், சர்வதேச சந்தை அணுகல், கார்ப்பரேட் மற்றும் யூனிகார்ன் இணைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பிரத்யேக ஆதரவு வழங்கப்படும்.

தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளின் (என்எஸ்ஏ) இதற்கு முந்தைய மூன்று விருதுகளும் நாடு முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு செயல்படுத்துபவர்களின் பெரும் பங்களிப்பைக் கண்டன. மூன்று ஆண்டுகளில், தேசிய ஸ்டார்ட்அப் விருது(NSA)6,400 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களின் செயலில் பங்கேற்பைக் கண்டுள்ளது. 450 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களை வெற்றியாளர்களாகவும் இறுதிப் போட்டியாளர்களாகவும் அங்கீகரித்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு,https://www.startupindia.gov.in/  காணவும்

-----

VJ/JL/KPG



(Release ID: 1914673) Visitor Counter : 126