அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு மோடியின் தலைமையில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பயோடெக் ஸ்டார்ட்அப்களுடன் உலகின் முக்கிய உயிரியல் பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

Posted On: 07 APR 2023 1:33PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், வேகமாக வளர்ந்து வரும் பயோடெக் ஸ்டார்ட்அப்களுடன் உலகின் முக்கிய உயிரியல் பொருளாதாரமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று அறிவியல் & தொழில்நுட்பம் புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு)  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்திய வாழ்விட மையத்தில் இன்று நடைபெற்ற அசோசியேஷன் ஆஃப் பயோடெக்னாலஜி லெட் எண்டர்பிரைசஸ் (ABLE) யின் 20வது ஆண்டு விழாவின் தொடக்க உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், “மிஷன் கோவிட் சுரக்ஷா” திட்டத்தின் கீழ் இந்தியா இரண்டு வருடங்களில் நான்கு உள்நாட்டு தடுப்பூசிகளை உருவாக்கி உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளது என்றார். கோவாக்ஸின் மற்றும் எதிர்கால தடுப்பூசிகளின் சீரான வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கி உள்ளதால் நம் நாடு தொற்றுநோய்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2022 இல், இந்தியா 81 வது இடத்தில் இருந்து 40 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று அமைச்சர் கூறினார். நாம் இப்போது முதல் 25 இடங்களுக்குள் இருக்க வேண்டும்  இந்தியா @ 100 முதல் ஐந்து இடங்களுக்குள் வர வேண்டும் என்பதே இலக்கு என்றார். ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் என்ற நாட்டின் பசுமையான முழக்கத்தில் ஜெய் அனுசந்தனை சேர்ப்பதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுமைகளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை வழங்கியுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியா மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. வேகமாக வளரும் யூனிகார்ன்களின் தாயகமாக உள்ளது. புதிய யோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம்  ஸ்டார்ட்அப்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முடிவுகள் உலகளாவிய அளவுகோல்களை அமைத்து உலகிற்கு இணையாக உள்ளன. இன்று இந்தியாவின் இளம் திறமையாளர்கள் ஸ்டார்ட்அப்கள் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ பெண்கள் உட்பட செழிப்பான கண்டுபிடிப்பு வாயிலாக பொருளாதாரத்திற்கான வெற்றியின் கதையை எழுதுகிறார்கள்.

முந்தைய கொள்கை முயற்சிகளிலும் ஆட்சியிலும் புதுமைக்கான சூழல் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் புதுமைக்கான சூழ்நிலையை வழங்குவதால் இந்தியா முன்னேறி வருகிறது என்று அமைச்சர் கூறினார்.

இந்திய தொழில்துறையானது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. தொழில்நுட்ப இயக்கத்தில் புரட்சியை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளும்  உள்ளன. ஆராய்ச்சி, ஸ்டார்ட்அப்கள், கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு என்பது இளம் கண்டுபிடிப்பாளர்களை ஈர்க்கும் ஒரு தீவிரமான தேவையாக மாறியுள்ளது.

அசோசியேஷன் ஆஃப் பயோடெக்னாலஜி லெட் எண்டர்பிரைசஸ் (ABLE) நிறுவனம் அதன் 20வது வருட தொடக்கத்தில் தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் உலகளாவிய சமூகத்திற்கு பெரிதும் உதவும் தீர்வுகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

அசோசியேஷன் ஆஃப் பயோடெக்னாலஜி லெட் எண்டர்பிரைசஸ்(ABLE) 20வது ஆண்டு விழாவையொட்டி, "இந்திய உயிரித் தொழில்நுட்பத்தை செயல்படுத்துபவர்கள்" என்ற வெளியீட்டைக் கொண்டு வந்ததற்காக அவர் பாராட்டினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங்,  2030 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர் உயிரியல் பொருளாதாரம் என்ற இலக்கை அடையவும் (சுதந்திர நூற்றாண்டு) இந்தியா@100 இன் நூற்றாண்டு விழாவில் 1 டிரில்லியன் டாலர் உயிரியல் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா அடைய உதவுமாறு தொழில்துறைக்கு அழைப்பு விடுத்தார்.

----

 

VJ/JL/KPG


(Release ID: 1914672)