தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பந்தயம் மற்றும் சூதாட்டம் சம்பந்தமான விளம்பரங்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் புதிய எச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கியுள்ளது
Posted On:
06 APR 2023 4:50PM by PIB Chennai
பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை ஊடக நிறுவனங்கள், ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக இன்று (06.04.2023) வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளில், பந்தயம் தொடர்பான இணையதளங்களில் அதனை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை முக்கிய ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நாளிதழ்கள் சமீப காலமாக வெளியிட்டு வருவதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள், இது சம்பந்தமாக எச்சரிக்கை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவற்றில் பந்தயம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டிருந்தது. பந்தயம் தொடர்பான நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் ஈர்க்கப்படுவது பதிப்புரிமைச் சட்டத்திற்கு 1957 புறம்பாக உள்ளது.
மேலும் பிரஸ் கவுன்சிலின் பத்திரிகை நெறிமுறைகளை சுட்டிக் காட்டிய இந்த எச்சரிக்கை ஆலோசனைகள், நாளிதழ்கள் சட்டத்திற்கு புறம்பான அல்லது சட்டவிரோதமான விளம்பரங்களை வெளியிடக்கூடாது. நாளிதழ்களும், பருவ இதழ்களும் விளம்பரங்களை நெறிமுறைகளின்படியும், சட்ட நுணுக்கங்களின்படியும் தீவிரமாக கண்காணிப்பது பத்திரிகை பதிவுச்சட்டத்தின் கீழ், ஆசிரியரின் கடமையாகும். வருமானம் ஈட்டுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்காமல் பொதுநலன் சார்ந்த பொறுப்பு முக்கியமானதாகும்.
***
AP/GS/RJ/KPG
(Release ID: 1914381)
Visitor Counter : 189