தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

சேவையின் தரம் குறித்த ஒழுங்குமுறையின் மறுஆய்வுக்கான விண்ணப்ப தேதியை ட்ராய் நீட்டித்துள்ளது

Posted On: 06 APR 2023 1:11PM by PIB Chennai

சேவையின் தரம் குறித்த ஒழுங்குமுறையின் மறுஆய்வுக்கான விண்ணப்ப தேதியை ட்ராய் நீட்டித்துள்ளது. இந்த ஒழுங்கு முறைக்கான வரைவு வழிகாட்டுதல்கள் 24.02.2023 அன்று வெளியிடப்பட்டது. இது குறித்த கருத்துக்களை  தொடர்புடையவர்கள் 07.04.2023-க்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும் பல்வேறு தரப்பினர் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கோரிக்கைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி 3 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 01 மே 2023 அன்று கடைசி நாளாகும்.

 

***

AD/IR/AG/KPG



(Release ID: 1914307) Visitor Counter : 127