குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவருடன் பூடான் மன்னர் சந்திப்பு

Posted On: 04 APR 2023 6:43PM by PIB Chennai

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (ஏப்ரல் 4, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்.

இந்தியாவிற்கு பூடான் மன்னரை வரவேற்ற குடியரசுத் தலைவர், பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தியாவும், பூடானும் அனைத்து மட்டங்களிலும் நெருங்கிய நட்புறவை அனுபவித்து வருவதாகக் கூறினார். பூடானுடனான பன்முக மற்றும் தனித்துவமான நட்பை இந்தியா ஆழமாக மதிப்பதாகவும் அவர் கூறினார். பூடானின் நண்பனாக, சுகாதாரம், கல்வி, விவசாயம், உட்கட்டமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் அந்நாடு மேற்கொண்டு வரும் திட்டங்களை ஆதரிப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது என்றும் அவர் கூறினார். பூடானின் முன்னுரிமைகளில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த ஆண்டு பூட்டான் குறைந்த வளர்ச்சியடைந்த நாடு (LDC) பிரிவில் இருந்து முன்னேறி அதிக வருமானமுள்ள பொருளாதாரத்தை நோக்கிச் செல்லவுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் பயணத்தில் பூடானின் நம்பகமான நண்பனாக இந்தியா இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவும் பூடானும் தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். நமது இளைஞர்களின் ஆற்றலை சரியாகப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைப்பின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

                                                                                                                           ------ 

AP/CR/KPG



(Release ID: 1913665) Visitor Counter : 140