நிதி அமைச்சகம்

2022-23-ம் நிதியாண்டுக்கான (தற்காலிக) நேரடி வரி வசூலிப்பு மத்திய பட்ஜெட்டில் மதிப்பீடு செய்ததை விட ரூ.2.41 லட்சம் கோடி அதிகரிப்பு (16.97%)

Posted On: 03 APR 2023 7:02PM by PIB Chennai

2022-23-ம் நிதியாண்டுக்கான (தற்காலிக) நிகர நேரடி வரி வசூல் ரூ.16.61 லட்சம் கோடியாக உள்ளது. 2021-22 நிதியாண்டில் ரூ.14.12 லட்சம் கோடியாக இருந்த நிலையில், வரிவசூலிப்பு 2022-23ம் நிதியாண்டில் 17.63 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய்  ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய பட்ஜெட்டில்  மதிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தொகை ரூ.16.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டின் மதிப்பீட்டை விட கூடுதலாக  அதாவது, 16.97 சதவீதம் (தற்காலிக) நிகர வரிவருவாய் அதிகரித்துள்ளது.  

2022-23ம் நிதியாண்டிற்கான நேரடி வரிகள் வாயிலான  மொத்த வரி வருவாய் (தற்காலிக) ரூ.19.68 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய 2021-22 நிதியாண்டில் மொத்த வரி வருவாயான ரூ.16.36 லட்சம் கோடியோடு ஒப்பிடும் போது, 20.33 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

 அதே நேரத்தில் 2022-23ம் நிதியாண்டில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.3,07,352 கோடி வரி வசூல் தொகை வரி செலுத்தியவர்களின் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்பட்டது. முன்னதாக 2021-22ம் நிதியாண்டில் ரூ.2,23,658 கோடி வரி வசூல் திருப்பி வழங்கப்பட்டது.

 

***

AP/ES/RS/KPG



(Release ID: 1913429) Visitor Counter : 216