ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23 நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் முக்கிய சாதனைகள்

Posted On: 02 APR 2023 5:44PM by PIB Chennai

2022-23- ம் நிதியாண்டில், சரக்கு ஏற்றுதல், மின்மயமாக்கல், புதிய பாதை/ இரட்டிப்பு/ பாதை மாற்றம், லோகோ உற்பத்தி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய ரயில்வே புதிய சாதனைகளை நிகழ்த்தி மைல்கற்களை எட்டியுள்ளது.

2022-23 –ம்  நிதியாண்டில் இந்திய ரயில்வேயின்  சாதனைகளின் சிறப்பம்சங்கள் வருமாறு;

 சரக்கு ஏற்றுதல் & வருவாய்: 2021-22 நிதியாண்டின் 1418 மெட்ரிக் டன்களுடன் ஒப்பிடுகையில், 2022-23ல் இந்திய ரயில்வே 1512 மெட்ரிக் டன் கையாண்டுள்ளது.  இது 6.63% அதிகமாகும்.  ஒரு நிதியாண்டில் ரயில்வேக்கு  இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றம் இதுவாகும். 2022-23 நிதியாண்டில் வருவாய் ரூ. 2021-22 இன் ரூ.1.91 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.2.44 லட்சம் கோடியாகும்.  இது 27.75% அதிகமாகும்.

 சாதனை மின்மயமாக்கல்:  100 சதவீத மின்மயமாக்கலை நிறைவேற்றி, உலகின் மிகப்பெரிய பசுமை ரயில் வலையமைப்பாக இந்திய ரயில்வே வேகமாக முன்னேறி வருகிறது. 2022-23ல் இந்திய ரயில்வே வரலாற்றில் 6,542 கிமீ தூரம்  எட்டப்பட்டுள்ளது.  முந்தைய அதிகபட்ச மின்மயமாக்கல் 2021-22 இல் 6,366 கி.மீ. ஆக   இருந்தது, இது 2.76% அதிகரிப்பாகும்..

 புதிய பாதைகள் அமைப்பு, பாதை இரட்டிப்பு, தானியங்கி சிக்னலிங், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்கள் அமைப்பு, மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைத்தல் ஆகிய பணிகளிலும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

**********

AD/PKV/DL


(Release ID: 1913112) Visitor Counter : 238