சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காந்திநகரில் சுரங்க அமைச்சகத்தின் ஜி20 எரிசக்தி மாற்றம் பணிக்குழு (ETWG) கூட்டம் மற்றும் நிகழ்வு

Posted On: 02 APR 2023 1:08PM by PIB Chennai

சுரங்கத்துறை செயலாளர் விவேக் பரத்வாஜ் "எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகள்" குறித்த அமர்வுக்கு தலைமை தாங்குகிறார்.

 

இந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறுகிறது. சுரங்க அமைச்சகம் தற்போது நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் ஆற்றல் மாற்றம் பணிக்குழு விவாதங்களில் பங்கேற்கிறது.  எரிசக்தி மாற்றம் பணிக்குழுவின் (ETWG) முதல் கூட்டம் கர்நாடகாவின் பெங்களூருவில் பிப்ரவரி 2023 இல் நடைபெற்றது. இரண்டாவது எரிசக்தி மாற்றம் பணிக்குழு (ETWG) விவாதம் குஜராத்தின் காந்திநகரில் ஏப்ரல் 2 முதல் 4, 2023 வரை நடைபெறும்.

 

2வது எரிசக்தி மாற்றம் பணிக்குழு (ETWG) கூட்டத்தில், சுரங்கங்களின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், "எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பல்வகைப்பட்ட விநியோகச் சங்கிலிகள்" என்ற தலைப்பில் நாளை (03.04.2023) அமைப்பின் தலைவருடன் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்குவார். இந்த அமர்வின் போது, ​​சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலாளரால் தலைப்பில் விளக்கக்காட்சியும் வழங்கப்படும். முதல் எரிசக்தி மாற்றம் பணிக்குழுவின் (ETWG) போது நடைபெற்ற விவாதங்கள் குறித்து உறுப்பினர்களிடமிருந்து வரும் கருத்துகள் குறித்து விவாதிக்க இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. 2வது எரிசக்தி மாற்றம் பணிக்குழுவின் (ETWG) போது நடைபெறும் விவாதங்கள் இந்த விவகாரத்தில் இந்திய குடியரசுத் தலைவரின் முடிவுகள் தொடர்பான பரந்த கட்டமைப்பை வழங்கும்.

 

இந்த 2வது எரிசக்தி மாற்றம் பணிக்குழுவின் (ETWG) போது, ​​சுரங்க அமைச்சகத்தின் செயலாளர், "சர்வதேச ஒத்துழைப்பு மூலம் முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியில் உள்ள பாதிப்பை நிவர்த்தி செய்தல்" என்ற தலைப்பில் ஒரு ஆய்வு அறிக்கையையும் வெளியிடுவார். இந்தப் பிரச்சினையில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஒரு தெளிவான பார்வையைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சுரங்க அமைச்சகத்தால் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆலோசிப்பதற்கும், பிரச்சினையில் பெரிய அளவிலான உள்ளீடுகளைப் பெறுவதற்கும் ஒரு பக்க நிகழ்வும் இருக்கும். பக்க நிகழ்வு பிற்பகல் இரண்டு மணி முதல் 4:30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது. 03.04.2023 அன்று சுரங்கத்துறை அமைச்சகத்தால் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன்  இணைந்து ஏ டி பி (ADB மற்றும் சிஈஈடபிள்யு (CEEW )ஆகியவற்றின் வழிகாட்டுதலில் இந்தப் பக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."புதுப்பிக்கத்தக்கவை மற்றும் முக்கியமான தாதுக்கள் விநியோகச் சங்கிலிகளை ஆற்றல் மாற்றத்தை மேம்படுத்துதல்". என்ற தலைப்பில் இந்தப் பக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்வில் இரண்டு குழு விவாதங்களும் நடைபெறும். முதல் குழு, "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பது" என்ற தலைப்பைப் பற்றி விவாதிக்கும். இரண்டாவது குழு "உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தாதுக்களின் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் சுழற்சி முறையை அறிமுகம் செய்தல்" என்ற தலைப்பைப் பற்றி விவாதிக்கும்.

**********

AD/CJL/DL


(Release ID: 1913095) Visitor Counter : 153