பிரதமர் அலுவலகம்
சிபிஐ வைர விழா கொண்டாட்டங்களை ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
02 APR 2023 9:48AM by PIB Chennai
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி ஏப்ரல் 3-ம் தேதி மதியம் 12 மணிக்கு புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளார். மேலும், ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார். சிபிஐயின் வைர விழா கொண்டாட்ட ஆண்டைக் குறிக்கும் தபால்தலை மற்றும் நினைவு நாணயத்தை அவர் வெளியிடவுள்ளார். சிபிஐயின் ட்விட்டர் பக்கத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஏப்ரல் 1, 1963 தேதியிட்ட இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் மத்திய புலனாய்வு அமைப்பு நிறுவப்பட்டது.
**********
AD/CR/DL
(Release ID: 1913053)
Visitor Counter : 243
Read this release in:
Marathi
,
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam