பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை கடைசி மைல் வரை கொண்டு செல்லுமாறு பிஆர்ஐ பிரதிநிதிகளுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்

Posted On: 01 APR 2023 1:26PM by PIB Chennai

பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை நாட்டின் கடைக்கோடி வரை கொண்டு செல்ல வேண்டுமென மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  பிஆர்ஐ பிரதிநிதிகளை வலியுறுத்தினார்.

 

உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தின் பஞ்சாயத்து ராஜ் நிறுவன பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய டாக்டர் ஜிதேந்திர சிங், அடித்தட்டு மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால், பிரதமர் மோடியின் மக்களை மையப்படுத்திய முயற்சிகள் மற்றும் திட்டங்களின் மிக முக்கியமான தூதுவர்களாக பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள் இருக்க முடியும் என்றார். பிரதமர் மோடியின் ஆட்சியில் கிராம பஞ்சாயத்துகள் தொடர்ந்து அதிகாரம் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

 

சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் யார், மிகவும் தேவையுடையவர்கள் என்பதை அறிந்துகொள்வதோடு, எந்த வாக்கு வங்கியையும் கருத்தில் கொள்ளாமல் அனைத்துத் திட்டங்களின் நன்மைகளும் அம்மக்களைச் சென்றடைவதை பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது பிரதமருக்கு உள்ள நம்பிக்கை மற்றும் அவரது தலையீட்டால்தான், 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் (டி.டி.சி.) தேர்தல் நடந்தது என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

வளர்ச்சித் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், தரத்தில் சமரசம் செய்யாமல் திட்டங்களை விரைவாக முடிக்க புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

 

 2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி பதவியேற்றபோது, நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் கழிப்பறை, வீடு, தடுப்பூசி, மின் இணைப்பு மற்றும் வங்கிக் கணக்கு போன்ற வசதிகளின்றி இருந்ததாகவும், அமிர்த காலத்தில் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கான தீர்மானம் உள்ளதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

 

கிராமப்புற மக்களுக்கு அரசுத் திட்டங்கள் அதிக அளவில் சென்றடைய வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் குரலை பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

**********

AD/CR/DL


(Release ID: 1912858) Visitor Counter : 165