சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பன்முக சுழற்சி முறையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகள் இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

Posted On: 01 APR 2023 1:42PM by PIB Chennai

இந்தியாவின் ஜி20  தலைமையின் கீழ் ஆற்றல் மாற்றம் தொடர்பான  இரண்டாவது செயற்குழு கூட்டம், ஏப்ரல் 3, 2023 அன்று குஜராத் காந்திநகரில் 'பன்முக புதுப்பிக்கத்தக்க முக்கியமான கனிமங்களின்  விநியோகச் சங்கிலி வாயிலாக ஆற்றல் மாற்றத்தை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சுரங்க அமைச்சகம் மற்றும் மின் அமைச்சகம் ஆகியவை இணைந்து, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB)  ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (RE) மற்றும் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளைப் பல்வகைப்படுத்துவதோடு அதனைப்  பாதுகாப்பதில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தும்.

 

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு. பூபிந்தர் சிங் பல்லா மற்றும் சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு  விவேக் பரத்வாஜ் ஆகியோர் தொடக்க உரையாற்றுவார்கள்.  தொழில்துறையில் உள்ள உலகின் முன்னணி நிபுணர்கள் கூடி இதற்கான கல்வி மற்றும் கொள்கை உருவாக்கம் என்ற கருத்தாக்கத்தில் கூட்டம் நடைபெறும்.

 

இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில்(CEEW) முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அருணாபா கோஷ், 'எரிசக்தி மாற்றத்திற்கான மீள்நிலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல்' மற்றும் 'முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியில் உள்ள பாதிப்பை நிவர்த்தி செய்தல்' ஆகிய இரண்டு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW ) அறிக்கைகள் வெளியிடப்படும். 'எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் புதுப்பிக்கத்தக்கவையைப் பாதுகாப்பது' 'உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் கனிம மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவது மற்றும் சுழற்சி முறையை ஊக்குவித்தல் ஆகிய இரண்டு குழு விவாதங்கள் இந்த நிகழ்வில் இடம்பெறும். இந்நிகழ்ச்சியில் ஆற்றல் மாற்றம் பணிக்குழுத் தலைவர் திரு அலோக் குமார், மின் அமைச்சகத்தின் செயலாளர் திரு கெனிச்சி யோகோயாமா, தெற்காசிய பிராந்தியத் துறை, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), திருமதி மம்தா வர்மா, எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் முதன்மைச் செயலர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். டாக்டர் பிரையன் மதர்வே, எரிசக்தி திறன் பிரிவு, சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), டாக்டர் அஜய் மாத்தூர், சர்வதேச சூரிய கூட்டமைப்பின் (ISA), திருமதி கவுரி சிங், துணை பொது இயக்குனர் , (IRENA,) திரு ராஜர்ஷி குப்தா, ஓஎன்ஜிசி  நிர்வாக இயக்குனர், விதேஷ் லிமிடெட், சிஐஐ தேசியக் குழு இணைத் தலைவர்திரு ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா மற்றும் எம்.டி., அப்ரவா எனர்ஜி லிமிடெட், மற்றும் தெற்காசியாவின் பிரிவுத் தலைவர் திரு மயங்க் சௌத்ரி, தனியார் துறை செயல்பாடுகள், ஆராய்ச்சி வியூகம் மற்றும் புத்தாக்கம் இயக்குனர் ஏடிபிஆசியான் மற்றும் கிழக்கு ஆசியாவிற்கான பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (ERIA) டாக்டர் வி அன்புமொழி, மற்றும் ஆற்றல் மாற்றம் இயக்குனர் டாக்டர் பிரதீப் தரகன் ஆகியோர் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர்.

 

உலகளாவிய பொருளாதார மேம்பாடு காலநிலை அபாயங்களை தீவிரப்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பாதகங்களுடன் ஒத்துப்போகிறது. உலகம் இத்தகைய அபாயங்கள் இல்லாத எதிர்காலத்தை அடைய, 2021 மற்றும் 2050 க்கு இடையில் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் திறன்கள் முறையே 17 மற்றும் 10 மடங்கு வளர்ச்சியடைய வேண்டும். மேலும் மின் மாற்றத்தை செயல்படுத்த வருடாந்திர பேட்டரி வரிசைப்படுத்தல்கள் முறையே 50 மடங்கு மற்றும் 28 மடங்கு அதிகரிக்க வேண்டும். சூரிய, காற்று, பேட்டரிகள் மற்றும் ஹைட்ரஜன் போன்ற RE தொழில்நுட்பங்களின் தடையற்ற மற்றும் மலிவு விநியோகச் சங்கிலிகளுக்கான அணுகலை நாடுகளால் பெற முடிந்தால் மட்டுமே புதுப்பிக்கத்தக்க எரி பொருட்களுக்கு ஆபத்து இல்லாத மாற்றம் சாத்தியமாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவப்பட்ட திறனின் அடிப்படையில் இந்தியா ஏற்கனவே உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. 2070 க்குள் முழுமையான பாதுகாப்பு இலக்கை அடைய வேகமாக முன்னேறி வருகிறது.

 

இருப்பினும், தூய்மை ஆற்றல் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் பல தாதுக்கள் அரிதானவை. அதோடு அவை சில புவியியல் பகுதிகளில் பெரும்பாலும் குவிந்துள்ளன. கனிம-சார்ந்த தொழில்நுட்பங்களின் ஒரு முக்கிய நன்மை, அவற்றின் மறுபயன்பாடு மற்றும் தொடர்ந்து மறுசுழற்சி செய்யும் திறன் ஆகும். இது பொருத்தமான தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மூலம் நம்பகமான பொருட்களின் விநியோகத்தை பராமரிக்க உதவும். சுழற்சி முறையை ஊக்குவிப்பது கனிம மதிப்பு சங்கிலிகளை வலுப்படுத்தவும் உதவும். அதன் ஜி20 ஆண்டில், இந்தியாவின் மிஷன் லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) கொள்கைகள், சுழற்சி, உற்பத்தி மற்றும் இந்த கனிமங்களை புதுப்பிக்கத்தக்கதாக மாற்றுவதை ஊக்குவிக்க முடியும்.

**********

AD/CJL/DL


(Release ID: 1912856) Visitor Counter : 187