தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தகவல் அளிக்கும் முறை தேச நலன்களைக் காக்கிறது: மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்

Posted On: 31 MAR 2023 6:37PM by PIB Chennai

இந்திய தகவல் பணி அதிகாரிகளின் (ஐஐஎஸ்) பயிற்சி நிறைவு விழாவில் தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் பங்கேற்று உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள்  தொடர்பு  கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்சி) நடைபெற்ற 2018, 2019, 2020 தொகுதி  இந்திய தகவல் பணி அதிகாரிகளின்  பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய அவர்,  இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தகவல் அளிக்கும் முறை  தேசத்தின் நலன்களைக்  காப்பதாக தெரிவித்தார். 

இந்திய தகவல் பணி அதிகாரிகள்  திறம்பட தங்களது பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு தகவல்களை வழங்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் முக்கியத் திட்டங்களை மக்களுக்கு எளிதில் கொண்டு செல்வதில் இந்த அதிகாரிகள் மிக முக்கியப் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார். 280 வார்த்தைகளை கொண்ட ஒரு ட்விட்டர் பதிவு உலகம் முழுவதிலும் உள்ள 800 கோடி மக்கள் மத்தியில்  தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என அவர் கூறினார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் பகிர்வதில்  அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிட் பாதிப்புக்கு பின்னர் தொழில்நுட்பம் மேலும் முக்கிய பங்காற்றுவதாக கூறிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் புதிய தகவல் பரிமாற்ற முறைகளில் அனைவருக்கும் சமமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதிலும் இந்திய தகவல் பணி அதிகாரிகள்  முக்கியப் பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.  பொய்யான தகவல்கள் ஜனநாயகத்திற்கும், தேசத்திற்கும் ஆபத்தானவை என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் தளங்களில் வதந்திகளும், பொய்யான தகவல்களும் பரவுவதை தடுப்பதில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 மூன்று தொகுப்புகளைச் சேர்ந்த 52 அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், இளம் அதிகாரிகள்  அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

 

SM/PLM/RS/KRS


(Release ID: 1912697) Visitor Counter : 139