வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023 வெளியிடப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 31 MAR 2023 5:13PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளிநாட்டு வர்த்தக் கொள்கை 2023-ஐ இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மாறிவரும் தேவைகளுக்கேற்ப சிறந்த முறையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டது என்று கூறினார். நீண்ட காலமாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவாக விவாதிக்கப்பட்டு கொள்கை வகுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி ஏற்கனவே 750 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளதாகவும் இந்த ஆண்டு அது 760 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 ஆகஸ்ட் 6-ம் தேதி ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடியதை அவர் சுட்டிக்காட்டினார். ஏற்றுமதியை அதிகரிக்க அவர்களுக்கு பிரதமர் ஊக்கமளித்ததாகவும் அமைச்சர்  திரு பியூஷ் கோயல் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வர்த்தகத் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பரத்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தையும், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளையும் மேம்படுத்த ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை என்று அவர் குறிப்பிட்டார். ஊக்கத்தொகைகள், ஒருங்கிணைந்த முறையில் ஏற்றுமதி மேம்பாடு, வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல், மின் வணிகத்தை மேம்படுத்துதல் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

***

AD/PLM/RS/KRS

 


(रिलीज़ आईडी: 1912655) आगंतुक पटल : 1171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Odia , Telugu