வெளியுறவுத்துறை அமைச்சகம்
ஜி20 ஷெர்பாக்களின் இரண்டாவது கூட்டம் கேரளாவின் குமரகோமில் 2023 மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
29 MAR 2023 4:23PM by PIB Chennai
ஜி20 ஷெர்பாக்களின் (அரசு தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்) இரண்டாவது கூட்டம் கேரளாவின் குமரகோமில் 2023 மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறுகிறது. இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு இந்தியாவுக்கான ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் (ஷெர்பா) திரு அமிதாப் கந்த் தலைமை ஏற்க உள்ளார்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜி20 நாடுகள், ஒன்பது சிறப்பு அழைப்பாளர் நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். பொருளாதார மேம்பாடு, தற்போதைய உலகளாவிய சவால்கள் மற்றும் கொள்கை அமலாக்கம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
***
AD/PLM/MA/KPG
(रिलीज़ आईडी: 1911999)
आगंतुक पटल : 251