கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜி20 பணிக்குழு சார்பில் கலாச்சார பாதுகாப்பு குறித்த உலகளாவிய இணையதள கருத்தரங்கு

Posted On: 28 MAR 2023 6:13PM by PIB Chennai

ஜி20 அமைப்பின்  கலாச்சார பணிக்குழு சார்பில் கலாச்சார பாதுகாப்பு குறித்த உலகளாவிய இணையதள கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் கலாச்சாரம் சார்ந்த பொக்கிஷங்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் துவக்கவுரையாற்றிய  பணிக்குழுவின் தலைவரும், மத்திய கலாச்சாரத் துறை செயலாளருமான திரு கோவிந்த் மோகன்,  சட்டவிரோத சம்பவங்களுக்கு,  தேவையான கல்வியறிவின்மையும், போதுமான விழிப்புணர்வு இல்லாமையும் மிக முக்கிய காரணங்களாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கருத்தரங்கில்,  நீண்ட கால பிரச்சனையான சட்டவிரோத கடத்தல் மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை பாதுகாத்தல் குறித்து 28 நாடுகளைச் சேர்ந்த 40 நிபுணர்கள் ஒருங்கிணைந்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்ற  இந்த விவாதத்தில் 12 சர்வதேச அமைப்புகளைச்சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன.  

மேலும் சட்டவிரோத கடத்தல்களை தடுப்பதற்கு ஏதுவாக இடர்பாடு மேலாண்மை, அவசர கால நடவடிக்கை  உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றும்  இணையதளம் வாயிலான வர்த்தகத்தில் உள்ள சவால்கள் குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான  அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதேபோல் இணையதள வர்த்தகத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும் எனவும் இந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நான்கு உலகளாவிய இணைய தள கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. இந்த கருத்தரங்குகள் வரும், ஏப்ரல் 13,19 மற்றும் 20ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.

 

SM/ES/RS/KRS

 


(Release ID: 1911599) Visitor Counter : 197


Read this release in: English , Urdu , Hindi , Punjabi