உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அகமதாபாத் – காட்விக் இடையிலான நேரடி விமான சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 28 MAR 2023 3:42PM by PIB Chennai

அகமதாபாத் – காட்விக் இடையிலான நேரடி விமான சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். இந்த இரு இடங்களுக்கு இடைநில்லாத விமானத்தை ஏர்இந்தியா நிறுவனம் இன்று முதல் இயக்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு.சிந்தியா, இந்த புதிய விமானப் போக்குவரத்து புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதுடன் இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்று கூறினார்.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் தற்போது 50 லட்சம் உள்நாட்டு பயணிகளையும். 25 லட்சம் வெளிநாட்டு பயணிகளையும் கையாளும் திறனைக் கொண்டுள்ளது. இதனை 1.60 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் குஜராத் அமைச்சர் திரு.பல்வந்த் சிங் ராஜ்புத், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு.ராஜீவ் பன்சல், ஏர்இந்தியா தலைமை செயல் அதிகாரி திரு.கேம்ப்பெல் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

***

 (Release ID: 1911430)

AD/PKV/RR/KRS


(रिलीज़ आईडी: 1911546) आगंतुक पटल : 239
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu