புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகப்பட்ச வருடாந்திர கடன் விடுவிப்பு மற்றும் கடன் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 28 MAR 2023 12:32PM by PIB Chennai

2022-23 நிதியாண்டில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை அதிகபட்சமாக ரூ.16,320 கோடி கடன் தொகையை விடுவித்து சாதனைப் படைத்துள்ளது. முன்னதாக, 2021-22-ம் நிதியாண்டில் ரூ.16, 071 கோடி கடன்தொகை வழங்கப்பட்டது.  இதேபோல், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை 2021-22 நிதியாண்டில் ரூ. 23,921 கோடி கடன் தொகையை வழங்க ஒப்புதல் அளித்திருந்தது. 2023, மார்ச் 27ம் தேதி வரை ரூ.32,578 கோடி கடன் வழங்க ஒப்பதல் அளித்துள்ளது.

இந்த நிறுவனம் இந்தியாவின் நீடித்த மற்றும் தூய எரிசக்தி எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கி வருகிறது.

இந்த முகமையின்  சாதனை குறித்து கருத்து தெரிவித்த அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பிரதாப் குமார் தாஸ், முன்னெப்போதும் இல்லாத வகையில் கடன்தொகை விடுவிப்பு மற்றும் கடன் தொகை ஒப்புதல் வழங்கி சாதனை படைத்திருப்பதன் மூலம், இந்தியாவின் புதுபிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு நிதி வழங்கி அதனை முன்னிறுத்தும் இலக்கை தங்கள் நிறுவனம் பிரதிபலிப்பதாக கூறினார். இதன் மூலம் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி நிதி நிறுவனமாக இந்த நிறுவனம்  முன்னேறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

***

(Release ID: 1911361)

AD/ES/RS/KRS


(रिलीज़ आईडी: 1911391) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Telugu , Kannada