தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு 8.15% வட்டி வீதத்திற்கு மத்திய அறங்காவலர்கள் வாரியம் பரிந்துரை
प्रविष्टि तिथि:
28 MAR 2023 11:13AM by PIB Chennai
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் வாரியத்தின் 233-வது கூட்டம் மத்திய தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் தலைமையில் இன்று நடைபெற்றது. மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெளி, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் திருமிகு ஆர்த்தி அகுஜா உள்ளிட்டோரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
2022-23 நிதியாண்டிற்கான உறுப்பினர்களின் கணக்குகளில் 8.15% வருடாந்திர வட்டியை வரவு வைக்க மத்திய வாரியம் பரிந்துரைத்தது. வட்டி வீதம் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், அதைத் தொடர்ந்து வட்டித் தொகையை சந்தாதாரர்களின் கணக்கில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வரவு வைக்கும்.
வளர்ச்சி மற்றும் உபரி நிதி இரண்டையும் சமநிலைப்படுத்தும் தொகையின் பாதுகாப்பை மத்திய அறங்காவலர்கள் வாரியம் பரிந்துரைத்தது. 8.15% வட்டி விகிதம், உபரியை பாதுகாப்பதோடு உறுப்பினர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கவும் உத்தரவாதம் அளிக்கிறது. சொல்லப்போனால் 8.15% வட்டி விகிதம் மற்றும் உபரியான 663.91 கோடி என்பது கடந்த ஆண்டை விட அதிகம்.
வாரியத்தின் பரிந்துரையின்படி மொத்த அசல் தொகையான ரூ. 11 லட்சம் கோடியில் உறுப்பினர்களின் கணக்கில் சுமார் ரூ. 90,000 கோடி விநியோகிக்கப்பட வேண்டும். இத்தொகை கடந்த 2021- 22-ம் நிதியாண்டில் முறையே ரூ. 9.56 லட்சம் கோடியாகவும், ரூ. 77,424.84 கோடியாகவும் இருந்தது. கடந்த 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் வருமானம் மற்றும் அசல் தொகையின் வளர்ச்சி முறையே 16% மற்றும் 15% அதிகமாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1911334
***
(Release ID: 1911334)
AD/RB/RR
(रिलीज़ आईडी: 1911373)
आगंतुक पटल : 467