வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

முதலாவது வர்த்தக மற்றும் முதலீட்டு பணிக்குழுக் கூட்டத்தின் போது ஜி20 வர்த்தக நிதி ஒத்துழைப்பு குறித்த சர்வதேச மாநாடு மும்பையில் மார்ச் 28-ந் தேதி தொடங்குகிறது

Posted On: 27 MAR 2023 2:47PM by PIB Chennai

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழு  கூட்டம் மும்பையில்  மார்ச் 28-ம் தேதி முதல்  30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மூன்று நாள் கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பாளர் நாடுகள், பிராந்திய குழுக்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்.  இந்தக் கூட்டத்தில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

முதல் நாளான மார்ச் 28-ம் தேதி, ‘வர்த்தக நிதி’ தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெறும். இந்த சர்வதேச மாநாட்டுக்கு இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் மற்றும் இந்தியா ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

வர்த்தக நிதி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியதாகும். மேலும் இது சர்வதேச வர்த்தக முதலீடுகளை பராமரிப்பதற்கும், தீவிர பணப்புழக்கத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கும் பயன்படக்கூடியதாகும். அனைத்து சர்வதேச வர்த்தகத்தில் சுமார் 80சதவீதம் ஒருவிதமான வர்த்தக நிதி வழிவகையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. உலக வர்த்தக நிதி வங்கிகள், வர்த்தக நிதி நிறுவனங்கள், ஏற்றுமதி கடன் முகமைகள், காப்பீட்டாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை உள்ளடக்கியதாகும்.  எல்லை கடந்த வர்த்தகத்திற்கு வர்த்தக நிதி உயிர்நாடியாகத் திகழ்கிறது. 2020-ல் முக்கிய உலக வங்கிகள், 9  டிரில்லியன் வர்த்தக நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், வர்த்தக நிதி இடைவெளி விரிவடைந்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் இடைவெளி 2018 ல் 1.5 டிரில்லியனாக இருந்தது. அது தற்போது 2 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றன. இந்த வர்த்தக நிதி இடைவெளியால் அவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் சர்வதேச மாநாடு  இரண்டு அமர்வுகளாக நடைபெறும். முதலாவது அமர்வு, வர்த்தக நிதி இடைவெளியை குறைப்பதில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் மேம்பாடு, ஏற்றுமதி கடன் முகமைகளின் பங்கு பற்றி ஆய்வு செய்யும். இரண்டாவது அமர்வு, வர்த்தக நிதி அணுக்கத்தை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஃபின்டெக் தீர்வுகள் எவ்வாறு மேற்கொள்வது என்பதை ஆய்வு செய்யும்.

முதலாவது அமர்வின் நெறியாளராக தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் திருமிகு லதா வெங்கடேஷ் இருப்பார். ஆசிய வளர்ச்சி வங்கியின் வர்த்தக நிதித்தலைவர் திரு ஸ்டீபன்பெக் ஐஎப்டிஐ இயக்குனர் பேராசிரியர் ஆன்ட்ரீஸ் கிளாசன், ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திரு கவுரவ் பட்னாகர் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பார்கள்.

இரண்டாவது அமர்வுக்கு டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்த திருமிகு டமன்னா இனாம்தார் நெறியாளராக இருப்பார்.

***

AD/PKV/AG/KRS



(Release ID: 1911156) Visitor Counter : 336