சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (EIACP )பிரதமரின் மிஷன் லைஃப் செய்தியை மக்களிடம் கொண்டு செல்கிறது
Posted On:
26 MAR 2023 10:28AM by PIB Chennai
சுமார் 59,500 பேர் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உறுதியளிக்கப்பட்ட (ப்ரோ-பிளானட் பீப்பிள் (P3) )ஆவதற்கு உத்வேகம் அளித்தனர்
சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம், தில்லி, உத்தரகண்ட் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் திட்ட மையங்கள் மற்றும் வளக் கூட்டாளர்களால் (EIACP PC-RP) 2023 மார்ச் 20-24 வரை மிஷன் லைஃபை ஊக்குவிக்கும் ஐந்து நாள் வெகுஜன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட மிஷன் லைஃப், வீணான நுகர்வுக்கு பதிலாக கவனத்துடன் சுற்றுச்சூழல் உணர்வோடு தேவைக்கேற்ற பயன்பாடுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உறுதியளிக்கப்பட்ட ப்ரோ-பிளானெட் பீப்பிள் (P3) எனப்படும் தனிநபர்களின் உலகளாவிய ஒருங்கிணைப்பை உருவாக்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம்(EIACP ) ஏற்பாடு செய்த மிஷன் லைஃப் மற்றும் அதன் கருப்பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சுமார் 59,500 பேர் (YouTube மூலம் 2000 நேரடி பங்கேற்பாளர்கள் உட்பட) பங்கேற்றனர். ஹரித்வார், ரிஷிகேஷ் மற்றும் டேராடூனில் உள்ளூர் சமூகங்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை பின்பற்றவும், உலகை சிறந்த இடமாக மாற்ற உறுதிபூண்டுள்ள சுற்றுச்சூழல் உணர்வுள்ள தனிநபர்களின் உலகளாவிய ஒருங்கிணைப்பை உருவாக்கவும் இந்த திட்டம் மக்களை ஊக்கப்படுத்துகிறது.
ஹரித்வாரில், ஹர்-கி-பௌரி, மேல் மற்றும் கீழ் சந்தை மற்றும் கோட்வாலி சௌக் ஆகிய இடங்களில் இதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. டூன் பல்கலைக்கழகம், ஸ்ரீ தேவ் பூமி தொழில்நுட்ப நிறுவனம், கிங்ஸ்டன் இம்பீரியல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குருகுல் காங்கிரி விஸ்வவித்யாலயா மற்றும் பதஞ்சலி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அணிவகுப்பு உறுதிமொழி மற்றும் கலந்துரையாடல் அமர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமூகத்தினர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பர்மார்த் நிகேதனில், மாலை கங்கா ஆரத்தியின் போது, மிஷன் லைஃப்பின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு சுவாமி சிதானந்த சரஸ்வதி மற்றும் சாத்வி பகவதி சரஸ்வதி ஆகியோர் சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். உலக வனவிலங்கு நிதிய ஒருங்கிணைப்பாளர்( EIACP PC-RP,) டாக்டர். ஜி அரீந்திரன்; உலக வனவிலங்கு நிதிய கண்காணிப்பாளர் (SPO, WWF EIACP PC-RP,) திரு. ராஜீவ் குமார், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக கண்காணிப்பாளர் (SPO JNU EIACP PC-RP,) திருமதி ஸ்வாதி சிங்; மற்றும் IO, UKPCB EIACP PC-RP, திருமதி நிஹாரிகா டிம்ரி ஆகியோருக்கு ருத்ராக்ச மரக்கன்று கொடுத்து சுவாமி சிதானந்த சரஸ்வதிஜி வாழ்த்தினார். உலக வனவிலங்கு நிதியம் உட்பட மேற்கண்ட அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளன.
மேலும் முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ள:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1910840
***
SRI/CJL/DL
(Release ID: 1910970)
Visitor Counter : 175