குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சர்வோதயா தினத்தையொட்டி சர்தார் பகத் சிங், சுக் தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு குடியரசுத் துணைத்தலைவர் மரியாதை
Posted On:
23 MAR 2023 3:25PM by PIB Chennai
சர்வோதயா தினத்தையொட்டி சர்தார் பகத் சிங், சுக் தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு மாநிலங்களவையில் தனது உரையின் போது, குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மரியாதை செலுத்தினார்.
நமது விடுதலைப் போராட்டத்தின் தலை சிறந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேசிய திரு தன்கர், அவர்களது தியாகங்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றியது என்றார். அவர்களது உச்சபட்ச தியாகத்தின் மூலம் தற்போது சுதந்திர இந்தியாவின் மக்கள் நிம்மதியாக ஜனநாயக முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மதிப்பை நாம் அனைவரும் நிலைநிறுத்த வேண்டும் என்றார். மேலும் விடுதலைப் போரட்டத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குடியரசுத் துணைத்தலைவர் தனது அறிக்கையில்;
“மதிப்புமிக்க உறுப்பினர்களே, இன்று விடுதலைப் போரட்டத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த இந்தியாவின் 3 தலைசிறந்த மைந்தர்கள், சர்தார் பகத் சிங், சுக் தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு
92-வது நினைவு தினமாகும். இந்த தலைசிறந்த மண்ணின் மைந்தர்கள் இதே நாளில் கடந்த 1931-ம் ஆண்டில், விடுதலைப் போரட்டத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.
அவர்கள் தங்களது மிகச் சிறிய வயதிலேயே செய்த மிகப்பெரிய உயிர்த் தியாகமானது நமது சுந்திரப் போராட்டத்திற்கு பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உயிர் தியாகப் பாதையை தேர்ந்தெடுத்தன் விளைவாக இன்று ஒவ்வொரு இந்தியரும் சுதந்திரமாக, மரியாதையுடன் ஜனநாயக வாழ்க்கை முறையை அனுபவித்து வருகின்றனர். அவர்களது இந்த தியாகமானது அனைவருக்கும் நம்பிக்கை அளித்து உத்வேகத்துடன் செயல்பட வழிவகை செய்கிறது.
அவர்கள் தேசபக்தி மற்றும் விடுதலைக்காக தங்களது உச்சபட்ச அர்ப்பணிப்பை அளித்துள்ளனர். இந்த நாளில் அந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவுக்கூர்வோம். நமது நாட்டை முன்னேற்ற உறுதிக்கொள்வோம் என்றார்.”
***
(Release ID: 1909918)
SM/GS/RJ/KRS
(Release ID: 1910002)
Visitor Counter : 160