பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ வீரர்களுக்கு சிறுதானியங்கள்

प्रविष्टि तिथि: 22 MAR 2023 1:19PM by PIB Chennai

ராணுவத்தில் பணியாற்றும் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் சிறுதானியங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ நா அறிவித்துள்ள நிலையில், சிறுதானியங்களை உலக நாடுகளுக்கு முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை மத்திய அரசு  மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராணுவ வீரர்களுக்கு பாரம்பரிய உணவான சிறுதானியங்களை விநியோகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறுதானியங்கள் ராணுவ வீரர்களுக்கான பிரத்யேக ரேஷனில் விநியோகம் செய்யப்பட உள்ளன. அவ்வாறு சிறுதானியங்கள் ராணுவ வீரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது 50 ஆண்டுகளுக்குப் பிறகு  இதுவே முதன்முறையாகும்.

பாரம்பரிய சிறுதானிய உணவுகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை என்பதுடன், ஏராளமான ஆரோக்கிய பலன்களை நமக்கு அளிக்கிறது. குறிப்பாக, பருவ நிலை மாறுபாட்டால் உருவாக்கும் வாழ்வியல் சார்ந்த நோய்களிலிருந்து விடுபட சிறுதானியங்கள் கைகொடுக்கும்.  இதனைக் கருத்தில் கொண்டே ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பிரிவினருக்கும் அன்றாட உணவில் சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றன.

-----

SM/ES/RS/KRS


(रिलीज़ आईडी: 1909603) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu