உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உடான் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் விமானங்களை இயக்குவதற்கு ரூ.2454 கோடி நிதி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 20 MAR 2023 4:22PM by PIB Chennai

நாடு முழுவதும் உடான் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் விமானங்களை இயக்குவதற்கு ரூ.2454 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்திற்கு ரூ.23.14 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ.1.40  கோடியும், கேரளாவிற்கு ரூ.105.09 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள 148 விமான நிலையங்களில் தேர்வு செய்யப்பட்ட 17 விமான நிறுவனங்களில் விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் 718 விமான இயக்ககச் சான்றிதழ்களை அளித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் டாக்டர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

****

(Release ID: 1908813)

SM/ES/RR/KRS

 


(रिलीज़ आईडी: 1908833) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Manipuri , Telugu