மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமர் மத்ஸய சம்பதா திட்டம் இந்தியாவில் மீன்பிடித் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என சாகர் பரிக்ரமா திட்ட 4-ம் கட்டத்தின் இறுதி நாளில் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா உறுதி
प्रविष्टि तिथि:
19 MAR 2023 5:03PM by PIB Chennai
மத்திய மீன்வளத் துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், மத்திய அரசு, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத் துறை, கர்நாடக அரசு, கோவா அரசு, இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு மற்றும் மீனவர் பிரதிநிதிகள் கடந்த 17-ம் தேதியன்று கோவாவின் மொர்முகாவ் துறைமுகத்தில் சாகர் பரிக்ரமா திட்டத்தின் 4-ம் கட்டத்தைத் தொடங்கினர். மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் முன்னிலையில், மீன்வளத்துறை செயலாளர் திரு.ஜதீந்திர நாத் ஸ்வைன் சாகர் பரிக்ரமா திட்ட 4-ம் கட்டத்தை கோவாவின் மொர்முகாவ் துறைமுகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
சாகர் பரிக்ரமா திட்டத்திம் 4-ம் கட்டம் 3 முக்கிய கடலோர மாவட்டங்களின் மஜாலி, கார்வார், பெலம்பரா, மங்கி, முருதீஸ்வர், அல்வெகோடி, மால்பே, உச்சிலா, மங்களூரு ஆகிய 10 இடங்களை உள்ளடக்கியதோடு, மால்பே துறைமுகம், உச்சிலா கிராமம் போன்ற பிற பகுதிகளை உள்ளடக்கி இன்று (19 மார்ச் 2023) மங்களூர் டவுன்ஹாலில் முடிவடைந்தது.
மால்பே துறைமுகத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு செண்டை மேளம் மற்றும் மீனவர்களின் நடனத்துடன் உற்சாக வரவேற்புடன் இன்றைய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில், மீனவர்கள் தாங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளான படகுகளுக்கு டீசல் பெறுதல், மீன்பிடித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மானியம் பெறுதல் , மீன்பிடிக்காத மற்றும் சமூகப் பாதுகாப்பு தேவைப்படும் வயதான மீனவர்களுக்கான ஆதரவு உள்ளிட்டவைகளை எழுப்பினர்.
பிரதமர் மத்ஸய சம்பதா (பிஎம்எம்எஸ்ஒய்) திட்டம் குறித்து மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா மீனவர்களிடையே உரையாற்றினார். பிஎம்எம்எஸ்ஒய், கேசிசி போன்ற திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இத்திட்டம் இந்தியாவில் மீன்பிடித்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார். மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவற்றில் நவீன முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மீன்களின் உற்பத்தியை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
-----
AD/CH/KPG
(रिलीज़ आईडी: 1908574)
आगंतुक पटल : 186