நிதி அமைச்சகம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 17 MAR 2023 7:24PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் நிறுவனத்தின்  பங்குகளை  ஐபிஓ மூலம் பங்கு சந்தைகளில் பட்டியலிட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான  மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  புதிய பங்கு வெளியீட்டின் மூலம் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் நிதியை உயர்த்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை பங்குச்சந்தையில் பட்டியலிடும் பணிகளை மேற்கொள்ளும்.

 2017-ம் ஆண்டு இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான  மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசு 1500 கோடி ரூபாய் முதலீட்டை செலுத்தி முதலீட்டு கட்டமைப்பில் மாற்றங்களை செய்த நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

***

AP/PL//RS/KRS(Release ID: 1908155) Visitor Counter : 135