மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பான ஒத்துழைப்பின் மூலம் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், புதிய கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்துதல் குறித்த ஜி20 கருத்தரங்கு அமிர்தசரஸின் கல்சா கல்லூரியில் மார்ச் 15 அன்று நடைபெற்றது

Posted On: 15 MAR 2023 5:28PM by PIB Chennai

சிறப்பான ஒத்துழைப்பின் மூலம் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், புதிய கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்துதல் குறித்த ஜி20 கருத்தரங்கு அமிர்தசரஸின் கல்சா கல்லூரியில் மார்ச் 15 அன்று நடைபெற்றது. இதனை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஐஐடி ரோப்பார் நடத்திவைத்தது. சமமான வளர்ச்சிக்கு நாடுகளுக்கிடையே இணைப்புகளை உருவாக்கும்  நோக்கத்தைக் கொண்ட எதிர்காலப் பணி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விவாதிக்க ஜி20 கல்விப் பணிக்குழுவைச்சேர்ந்த  பிரதிநிதிகள் இதற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கருத்தரங்க பிரதிநிதிகளை வரவேற்று பேசிய ரோப்பார்  ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ராஜீவ் அஹூஜா, உலக அளவில்  ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இந்தியா தாமாகவே தலைமைத்துவம் பெறுவதற்கான வாய்ப்பு பற்றி எடுத்துரைத்தார். உயர்க்கல்வித்துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

தொழில் துறையில் உருவாகி வரும் தொழில் நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி 4.0, நீடிக்க வல்ல வளர்ச்சி இலக்குகள் குறித்த ஆராய்ச்சி ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகளும், பொது விவாதங்களும் நடைபெற்றன.

கருத்தரங்கின் நிறைவு நிகழ்வில் பஞ்சாப் முதலமைச்சர் திரு பகவந்த் மான் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்லூடகக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 16,17 ஆகிய தேதிகளில் உள்ளூர் கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இதனைப் பார்வையிடலாம்.

 

***

AD/SMB/RS/KPG


(Release ID: 1907317) Visitor Counter : 104