பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் தளவாடத்திற்கான எளிமைப்படுத்தப்பட்ட சோதனை நடைமுறை குறித்த பயிலரங்கு

प्रविष्टि तिथि: 15 MAR 2023 4:12PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவின்  உதவியுடன் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ‘பாதுகாப்புத் தளவாடத்திற்கான எளிமைப்படுத்தப்பட்ட சோதனை நடைமுறை குறித்த ஒரு நாள் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையிலான இந்தப் பயிலரங்கு, பாதுகாப்புத் தளவாடங்களை ராணுவப் படைகளில் சேர்ப்பதற்கு முன், அவற்றை சோதனைக்கு உட்படுத்துவது பற்றி பங்குதாரர்கள் அனைவரின் கருத்துகளை கேட்டறிவதை நோக்கமாகக் கொண்டது.

இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, பாதுகாப்புத் தளவாடங்களுக்கான சோதனை நடைமுறைகளை எளிமைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தப் பயிலரங்கில் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள், பாதுகாப்புத் தளவாடத் தொழில் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவர்களோடு பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களின் மதீப்பிட்டு முகமைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

***

 

AD/SMB/RS/KPG


(रिलीज़ आईडी: 1907265) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu