ஆயுஷ்
யோகா பெருவிழா-2023 இரண்டாம் நாளில் யோகா மேம்பாடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன
Posted On:
14 MAR 2023 5:21PM by PIB Chennai
புதுதில்லியில் தல்கத்தோரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் யோகா பெருவிழா-2023ன் இரண்டாம் நாளில் யோகா மேம்பாடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. யோகா செயல் விளக்கங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து, பிரபல ஆளுமைகளின் உரையாடல், விநாடி வினா, போட்டிகள், சொற்பொழிவுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.
லடாக்கின் லே பகுதியில் உள்ள மகப்போதி சர்வதேச தியான மையம், தேசிய மொரார்ஜி தேசாய் யோகா மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்வி முறை, ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் நிபுணர்களின் அனுபவ பகிர்வு மூலம் யோகாவை மேம்படுத்த இது வகை செய்யப்பட்டுள்ளது.
பதஞ்சலி யோகா பீடம் மற்றும் பிரமீட் யோகா குழுவைச் சேர்ந்த குழந்தைகள் சில திறமை மிக்க யோகா பயிற்சிகளை செய்தது பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
***
AD/IR/SG/RR
(Release ID: 1906946)
Visitor Counter : 175