இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒய் 20 ஆலோசனைக் கூட்டத்தில் உலகளாவிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விவாதம்
Posted On:
11 MAR 2023 5:35PM by PIB Chennai
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து இன்று புனேவில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நான்காவது ஒய்20 ஆலோசனைக் கூட்டத்தின் அமர்வு நடைபெற்றது. 21 ஆம் நூற்றாண்டின் ஆற்றல்மிக்க உலகின் சூழலில் நமக்குத் தேவையான கல்வி சீர்திருத்தங்கள் எவை என்ற கேள்வியை, நிபுணர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைந்து இந்த அமர்வில் ஆய்வு செய்தனர்.
ஈராக்கின் யுனெஸ்கோவின் அமைதிக்கான கல்வி திட்ட மேலாளர் சைமன் குவானி கீர் குவானி, கலாச்சாரம் பற்றி ஒருபோதும் சமரசம் செய்யாமல், கல்வி கட்டமைப்பு கலாச்சாரம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அது மாணவர்களை அவர்களின் பின்னணியில் வேரூன்றி நிற்க வைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த இளம் கல்வி ஆர்வலரான திருமதி சோபியா பெர்முடெஸ், கல்விக்கான முழுமையான அணுகுமுறையைப் பற்றி பேசினார். பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஏற்றவாறு சிறப்புப் பயிற்றுவிப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கல்விக் கொள்கைகளை வகுப்பதில் தலைவர்கள் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும், ஏனெனில் அந்தக் கொள்கைகள் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவை என்று அவர் கூறினார். சீர்திருத்த நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாவிட்டால், எந்த வித எச்சரிக்கையுமின்றி அடுத்த ஐந்தாண்டுகளில் கல்வி ஒரு நெருக்கடியாக மாறும் என அவர் எச்சரித்தார்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த யுனெஸ்கோவின் திரு. உலிசெஸ் ப்ரங்கி, கல்விப் பாடத்திட்டத்தில் கடினமான மற்றும் மென்மையான திறன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள், போதிய உள்கட்டமைப்பு மற்றும் நிதி இல்லாததால் தற்காலத்தில் தேவையான ஹார்ட் ஸ்கில்ஸ் எனப்படும் தொழில்நுட்பத் திறன்களை வழங்குவதற்கு சிரமப்படுகின்றன. அதே நேரத்தில் சாப்ட் ஸ்கில்ஸ் என்று கூறப்படும் மனித வள திறன்கள் இல்லாமலே போய்விடும் நிலை உள்ளது என்று அவர் கூறினார்.
புனேவைச் சேர்ந்த பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி டாக்டர் அர்ஜுன் தியோர், இந்தியாவில் இளைஞர்கள் உயர் படிப்புக்காக வெளிநாடுகளில் எவ்வாறு குடியேறுகிறார்கள் என்பது பற்றிய மையப் பிரச்சினையை எழுப்பினார். இந்த பிரச்சனையை தீர்க்க இந்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் குறித்து அவர் பேசினார். இளைஞர்களுக்கு தரமான கல்வியை வழங்க வெளிநாட்டு நிறுவன அலுவலகங்கள், இயற்பியல் வளாகங்கள் மற்றும் சர்வதேச பேராசிரியர்களுடன் இணைந்து செயல்படுதல் போன்ற முயற்சிகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
1. கல்வியை நோக்கிய முழுமையான அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளித்தல்
2. கல்வி முறையில் நிதி மற்றும் முதலீடு அதிகரிப்பு
3. மென்மையான திறன்கள் மற்றும் தொழில் பயிற்சியில் கவனம் செலுத்துதல் ஆகியவை இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
அமர்வை அமெரிக்காவிலுள்ள ஃபுல்பிரைட் ஸ்காலர் திருமதி லின்ஸ்டி வைட்ஹெட் நெறியாளுகை செய்தார்.
***
SRI/PKV/DL
(Release ID: 1905978)
Visitor Counter : 181